மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் பணிபுரியும் நிலையில், அலுவலகப் பணிக்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

அலுவலகத்தின் பின்புறம் உள்ள உணவு விடுதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.மேற்கூரை இல்லாமலும், சுகாதாரமான தண்ணீர் வசதி இல்லாமலும் உள்ளது.இதன் அருகிலேயே ஆதார் கார்டு எடுப்பதற்கான அலுவலகமும் மற்றும் வடக்கு வட்டாட்சியர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக பணிக்காக வரும் மக்கள் இந்த உணவு விடுதியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. கேன்டீனில் உள்ள ஊழியர்களும் பொதுமக்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது இல்லை. மேலே கூரை இல்லாததால் சிறுசிறு ஜந்துக்களையும் சேர்த்து தான் ஊழியர்கள் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் வேறுவழியின்றி முகம் சுளித்தபடி ,உணவருந்தி செல்கிறார்கள். மாவட்டத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக உணவுவிடுதி, சுகாதாரமின்றி, நோய் பரப்பும் மையமாக உள்ளது,வேதனை அளிக்கிறது .எனவே மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
