


மதுரை பழங்காநத்தில் புதுயுக வாலிப திரேக பயிற்சி சாலை A.ராமு பயில்வான் நினைவாக இன்று குஸ்தி போட்டி நடத்தப்பட்டது இந்த போட்டிக்கு மேனேஜிங் டிரஸ்டி பழனி மற்றும் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினார் இந்த போட்டியை முனைவர் பொய்யாமொழி முன்னாள் மண்டல தலைவர் சாலைமுத்து மற்றும் டிரஸ்டி பெரியசாமி முன்னால் கவுன்சிலர் தவமணி மற்றும் போஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
மதுரை பழங்காநத்தில் 1944ம் ஆண்டு ராமர் பழனி நண்பர்களுடன் இணைந்து தனது குஸ்தி பள்ளிக்கூடத்தை துவங்கினார்…
இந்த நிலையில் கடந்த 2 மாதம் முன்பு 93 வயதான ராமர் என்பவர் இறந்து விட்டார் அவர் நினைவாக இன்று மதுரை பழங்காநத்தில் குஸ்தி போட்டி நடத்தப்பட்டது இந்த போட்டி நடப்பதை சமூக வலைத்தளங்களில் அறிந்த உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பவன் சர்மா தனது மாணவன் லவான்சு சர்மாவை இந்த போட்டியில் கலந்து கொள்ள மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள புதுயுக வாலிப திரேக பயிற்சி சாலைக்கு அழைத்து வந்து கலந்து கொண்டனர்..
இந்தப்போட்டியில் பழங்காநத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர் இந்த போட்டி இரண்டு ரவுண்டாக நடத்தப்பட்டது இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டதுஇந்த போட்டியில் கலந்துகொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லவான்சு சர்மா முதல் பரிசு வெற்றி பெற்றார் இரண்டாவது பரிசு மாணிக்கம் வெற்றி பெற்றார் இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது…

