• Fri. Mar 29th, 2024

மதுரையில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க 30 கண்காணிப்பு குழுக்கள்- மூன்றாம் அலையை சமாளிக்க தேவையான ஏற்பாடுகள் தயார் என மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் பேட்டி…

Byadmin

Aug 3, 2021

மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் கலந்து கொண்டு தாய்ப்பால் வார விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர் தாய்ப்பால் வார விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில்,

மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் கூட்டமாக கூட வாய்ப்புள்ள வணிக வளாகங்கள், கோவில்கள், சந்தைகளை கண்காணிக்க 30 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,

மதுரை மாநகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை, ஆகியோர் இணைந்து குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மூன்றாவது அலை வந்தாலும் அதை சமாளிக்க கூடிய வகையில் மதுரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகள் தேவையான அளவில் உள்ளன. மேலும் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் வகையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கொரானா மூன்றாம் அலையை எதிர்கொள்வதை விட அதை தடுப்பதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க தவறும் வணிக நிறுவனங்களுக்கு கூடுதல் அபராதம் மற்றும் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *