மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய் பாதிப்புடன அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளிகள் குணமடைந்தனர்.
கடந்த ஜூலை மாத இறுதி நிலவரப்படி மதுரை அரசு மருத்துவமனையில் 365பேர் கரும்பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் 331பேர் குணமடைந்துள்ளனர் எனவும் இதில் 112நோயாளிகளுக்கு கண் மூலமாக ஆம்போடெரிசின் மருந்து செலுத்தப்பட்டு குணமடைந்துள்ளனர் எனவும் சர்க்கரை நோய் உள்ளவர்களே கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டனர்.
365பேரில் 36பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருந்தது மற்ற நோயாளிகளுக்கு கொரோனா அறிகுறி மட்டுமே கண்டறியப்பட்டது. 365பேரில் கரும்பூஞ்சை போன்றே வெள்ளை மஞ்சள் நிற பூஞ்சை போன்ற பல்வேறு பூஞ்சை பாதிப்புகளும் பரிசோதனையில் கண்டறியப்பட்டது எனவும்
மதுரை அரசு மருத்துவமனையில் போதுமான ஆம்போடெரிசின் மருந்துகள் இருப்பு உள்ளது எனவும் கொரோனா இரண்டாம் அலையின் போது கரும்பூஞ்சை நோய் சிகிச்சை அளிப்பது என்பது சவாலாக இருந்தது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் கரும்பூஞ்சை பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஒரு கண்ணில் குணமடைந்தாலும், சர்க்கரை நோயை முறையாக கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால் சில நாட்களில். அதே நோயாளிக்கு மறு கண்ணில் கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்றார்.
30வயது முதல் 80வயதினர் வரை கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது எனவும்,
கரும்பூஞ்சை மட்டுமின்றி கொரோனா போன்ற நோய்களின் பாதிப்பு என்பது சர்க்கரை நோயால் அதிகரிப்பதாகவும், சர்க்கரை அளவிற்கு ஏற்ப சிகிச்சை பெற்றால் மட்டுமே நோய் பாதிப்புகளில் இருந்து மீள முடியும் என்றார்.
கொரோனா கரும்பூஞ்சை நோயை கட்டுப்படுத்த உதவிய மருத்துவகுழுவினருக்கு நன்றிகளை தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது அனைத்து துறை தலைவர்கள், மருத்துவர்கள் உடனிருந்தனர்.