• Tue. Apr 28th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கோவை மத்திய சிறைச்சாலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்!…

By

Aug 7, 2021

தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தாராளமாக செல்போன் பயன்படுத்துவதாகவும் போதைப்பொருள் புழக்கத்தில் உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதைப்போல கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறையிலும் மாநகர் போலீஸ் கமிஷனர் தீபக் தாேமார் உத்தரவின் பேரில், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தாஸ் தலைமையில் 100 போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை காலை 6 மணி முதல் 8 மணி வரை நடந்தது.

அப்போது அவர்கள் செல்போன், போதைப்பொருட்கள். உள்ளதா? என்பது குறித்து கைதிகள் அறை, கழிவறை, உள்ளிட்ட இடங்களில் சல்லடை போட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆனால் அவ்வாறு எதுவும் சிக்கவில்லை கைதிகள் சட்டவிரோதமாக செல்போன் மூலம் வெளியிடங்களுக்கு பேசி வருகிறார்களா? எனவும் சோதனை நடத்தப்பட்டது. அதிலும் செல்போன்கள் எதுவும் சிக்கவில்லை.

போலீஸாரின் இந்த சோதனையால் சிறைக்கைதிகள் இடையே பரபரப்பு நிலவியது.