தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மாணவர்களுக்கு கோடை வெப்பத்தை முன்னிட்டு பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்ட காரணத்தால் பாடத்திட்டங்கள் வேகமாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடப்பு ஆண்டிற்கு நடத்தப்பட வேண்டிய அனைத்து தேர்வுகளின் கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் அழகு தேர்வு வருகின்ற ஜூலை 21 முதல் ஜூலை 27 வரையும், ஆறு முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவநிலை தேர்வு ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரையும், இரண்டாம் அழகு தேர்வு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்வி ஆண்டுக்கான அனைத்து தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.