

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரோபோடிக் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெண் என்ஜினியர் ஒருவர் ரோபோ தொழில்நுட்ப பயிற்சியை உருவாக்கியுள்ளார்.
தமிழகத்தில் விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள் மற்றும் பல்துறை நிபுணர்கள் பலரும் தங்கள் மாநிலத்திற்கு மற்றும் அங்கு பயிலக்கூடிய இளம் மாணவர்களுக்கு உதவும் விதமாக பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். அதன்படி தமிழகத்தில் வாழப்பாடியை சேர்ந்த பெண் பொறியாளர் கிருத்திகா என்பவர் ஜெர்மன் நாட்டில் சர்வதேச அளவிலான முன்னணி ரோபோ தயாரிப்பு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் தானாக முன்வந்து தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் தொழில்நுட்பம் குறித்து அடிப்படை பயிற்சி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மையா மற்றும் ரோபோடிக் பவுண்டேஷன் என்ற ஒரு அமைப்பை தற்போது உருவாக்கியுள்ளார்.
இதன் மூலமாக மாணவர்களுக்கு ரோபோடிக் துறையின் அடிப்படை பயிற்சிகளை வழங்கி, அவர்களை 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் ரோபோ வடிவமைப்பு போட்டியில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இவரின் இந்த புதிய திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.