• Thu. Apr 18th, 2024

பெரியார் வைகை பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்….

Byadmin

Jul 30, 2021

கர்னல் பென்னி குக் நினைவு இல்லம் மற்றும் வளாகத்தை இடித்துவிட்டு கலைஞர் பன்னாட்டு நினைவு நூலகம் அமைப்பதற்கு பெரியார் வைகை பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுரை பெரியார் வைகை பாசன ஆயக்கட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் ராமன் தலைமையில்

கர்னல் பென்னி குக் நினைவு இல்லம் மற்றும் வளாகத்தை இடித்துவிட்டு கலைஞர் பன்னாட்டு நினைவு நூலகம் அமைப்பதற்கு பெரியார் வைகை பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் அதன் பின்னர் தலைவர் ராமன் செய்தியாளரிடம் கூறியது மதுரை நத்தம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள பெரியாறு அணை கட்டிய தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உருவாக்கிய விவசாயிகள் மனித கடவுள் கர்னல் பென்னிகுக் நினைவு இல்லம் மற்றும் வளாகத்தை இடித்து அகற்றிவிட்டு தமிழக அரசு முன்னாள் முதல்வர் கலைஞர் பன்னாட்டு நினைவு நூலகம் அமைப்பதற்கு இந்த இடத்தை தேர்வு செய்ததற்கு பதிலாக வேறு மாற்று இடத்தை தேர்வு செய்து கட்டிக் கொள்ளவும் இல்லையென்றால் பெரியார் வைகை பாசன விவசாயிகளின் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *