

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து, ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு இந்திய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஜூலை 19 ஆம் தேதியான இன்று மாலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமை வகித்தார் மாநில செயலாளர் குணாளன், மாநில குழு உறுப்பினர் சுந்தரலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் கையகப்படுத்தி, இலவச மருத்துவ சேவை செய்ய வேண்டும், ஏழை குடும்பங்களுக்கு மாதம் 10,000 நிதி உதவி வழங்க வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் கந்தசாமி நன்றி கூறினார்.