சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 பட போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. காளிமாதா படத்தோடு பிச்சைக்காரன் 2 என்று வடிவமைக்கப்பட்டுள்ளது இந்து மக்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவதாக உள்ளது என்று இந்து மக்கள் கட்சியின் தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோலைக்கண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக படத்தயாரிப்பாளர் பாத்திமா ஆண்டனிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்து மதக்கடவுளை இழிவுபடுத்தும் விதமாக திட்டமிட்டு இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த போஸ்டரை நீக்க வேண்டும். இல்லையெனில் வழக்கு தொடரப்படும். தென் மாவட்டத்தில் எந்த தியேட்டரிலும் படத்தை ஓடவிடமாட்டோம் என்று சோலைக்கண்ணன் தனது கடிதத்தில் எச்சரித்துள்ளார்.