

பாதுகாப்புத்துறையை தனியார்மயமாக்காதே பொதுத்துறை நிறுவனங்களை விற்காதே உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. வெள்ளியன்று திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற ;இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சார்பாக கே.பிரபாகரன் கே.ஆர்.கணேசன எல்.பி.எப் சார்பாக அழகர்சாமி பாலு ஏ.ஐ.டி.யு.சி. சார்பாக பாலன் ராஜாங்கம் எச்.எம்.எஸ் சார்பாக சையது இப்ராகிம் ஐ.என்.டி.யு.சி. சார்பாக கண்ணன் உமா ஏஐ.சி.சி.டி.யு. சார்பாக கண்ணன் எம்எல்எப் சார்பாக மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

