• Sun. Mar 16th, 2025

பலே வேளாண் பட்ஜெட்… முதல் முத்தான 10 முக்கிய அறிவிப்புகள் இதோ!…

By

Aug 14, 2021

021-2022 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

என்னென்ன என பார்க்கலாம்…

தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக, 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இதில் இடம்பெற்ற முக்கிய திட்டங்கள் மற்றும் முக்கிய கொள்கை முடிவுகள் பின்வருமாறு.

2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் சார்புத்துறைகளுக்கு என்று ரூ.34,220.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சர்க்கரைத்துறை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம், கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, நீர்வண ஆதாரத்துறை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை போன்ற உழவர் நலன் சார்ந்த துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் பலன்கள் ஒட்டு மொத்த கிராம வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒருங்கிணைக்கப்படும். இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.34,220.65 கோடி நிதி ஒதுக்கீடு.

ஐந்து ஆண்டுகளில் அனைத்து அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த கிராமங்களிலும் ‘கலைஞரின் வேளாண் வளர்ச்சித் திட்டம்* அறிமுகம். நடப்பாண்டில் 2500 கிராமங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிப் பரப்பினை உயர்த்தி, விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கான திட்டப்பணிகளுக்காக (250 கோடி மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு.

ஒன்றிய. மாநில அரசுத் திட்டங்களை ஒன்றிணைத்து ரூ.905.45 கோடி, கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். ஆக மொத்தம் ரூ.1,245,45

நெல் விவசாயிகளின் நலனுக்காக, நெல்லிற்கான கொள்முதல் விலை சாதாரண இரகத்திற்கு குளிண்டாலுக்கு ரூ.2015 சன்ன இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2060 என உயர்த்தி நிர்ணயம். இதற்காகும் கூடுதல் செலவினத்தொகை ரூ.99.38 கோடி ஆக மொத்தம்ரூ.319.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், பயிர் சாகுபடிமட்டுமல்லாது இதர தொழில்களையும் மேற்கொண்டு. ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்ட வல்ல ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுப்பண்ணையத்திற்காக ரூ. 119.402 கோடி ஒதுக்கீடு

விவசாயிகளின் பம்ப்செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ. 4,508.23 கோடி நிதிஒதுக்கீடு. 6. பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகளின் சார்பாக, காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக ரூ.2.327 கோடி நிதி ஒதுக்கீடு.

முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத்திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் மாடித்தோட்ட தளைகள் விநியோகம். காய்கறி விதைத்தனைகள் நியோகத்திற்காக ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு 8. நுண்ணீர் பாசனத்திட்டத்தின்கீழ். சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும். இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் தொடர்ந்து மானியம் வழங்கி, 1,50,000 எக்டரில் செயல்படுத்திட ரூ.982.48 கோடி நிதி ஒதுக்கீடு.

முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் நடப்பாண்டில் தொகுப்பு அணுகுமுறையில் மானாவாரி நிலங்களில் 3 இலட்சம் வகையில், ரூ.146.64 கோடி நிதி ஒதுக்கீடு. கீழ், 7.5 இலட்சம் ஏக்கர் விவசாயிகள் பலன்பெறும்

ரூ.140 கோடி மானியத்தில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம்.