• Wed. Apr 24th, 2024

விவசாயிக்கு இனி ஊக்கத்தொகை… இதுக்கெல்லாம் ஸ்பெஷல் மானியம்!…

By

Aug 14, 2021

தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக, 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இதில் நெல் விலை உயர்வு, விதை மற்றும் பம்பு செட்டிற்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ். 70சதவிகித மானியத்தில் 5, 000 விவசாயிகள் பயன்பெறுவதற்கு ரூ. ரூ114.68 கோடி ஒதுக்கீடு.

விவசாயிகளின் நலனுக்காக, கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ42.50. கூடுதல் “சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.150/- வழங்குவதற்கு ரூ.178.83 கோடி நிதி, கரும்பு உற்பத்திக்கான சிறப்புத்திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

மண் வளத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்குவதற்காக இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ரூ.33.03கோடியில் செயல்படுத்தப்படும்.

நெல், சிறுதானியங்கள். பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், தென்னை, பருத்தி, பழங்கள் போன்ற பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியை உயர்த்தவும் மொத்தமாக ரூ.300.56 கோடி ஒதுக்கீடு.

வேளாண் தொடர்பான பல்வேறு முக்கிய பிரச்சினைகளை அவ்வப்போது ஆய்வு செய்து, தீர்வு காண மாநில அளவில் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் உயர்நிலைக்குழு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த எலுமிச்சை. முருங்கை. கறிவேப்பிலை, கற்பூரவல்லி, திப்பிலி. கற்றாழை. புதினா போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் அடங்கிய இரண்டு இலட்சம் ஊட்டச்சத்துத் தனைகள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.2.18 கோடி நிதி ஒதுக்கீடு.

மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க ரூ-10,000 /- வீதம் 1,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

மழை நீரினை சேமித்து, பயிர் உற்பத்தியை பெருக்க விவசாயிகளின் வயல்களிலேயே 500 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.

தற்போதுள்ள 50 உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.12.50 கோடி. புதிதாக 10 உழவர் சந்தைகளை உருவாக்க ரூ. 6 கோடி ஒதுக்கீடு

பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி பாதுகாத்து. விதை உற்பத்தி செய்து. விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில், நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம்.

குறைந்த வாடகையில் இயந்திரங்களை வழங்கும் திட்டத்தினை, வலுப்படுத்துவதற்காக, ரூ.23.29 கோடியில் நவீன வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும்.

நமது மாநில மரமான பனை மரத்தை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த, பனை தொடர்பான பல்வேறு தொழில்களை ஊக்குவிக்கவும், தேவையில்லாமல் வெட்டும் நடைமுறையை நெறிமுறைப்படுத்தப்படும் ரூ.3 கோடியில் பனை மரத்தினை மேம்பாட்டுத் திட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *