• Mon. Jan 20th, 2025

நெல்லையில் 200 பேருக்கு மஞ்சகாமாலை பாதிப்பு!…

By

Aug 15, 2021

நெல்லையில் 200 பேருக்கு மஞ்சகாமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையில் இருந்து மீண்டு தற்போது தான் தமிழக மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் நெல்லை களக்காடு அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது கிராமத்தினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அசுத்தமான தண்ணீர் காரணமாக மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரே கிராமத்தில் பலரும் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.