• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

நிதி நிறுவனம் நடத்தி 50 லட்சம் மோசடி செய்த உரிமையாளர் கைது. 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு….

Byadmin

Jul 30, 2021

கோவையில் தொடரும் நிதி நிறுவன மோசடி, மக்களின் ஆசையை தூண்டி ஏழை எளிய மக்களை தொடர்ந்து வதைக்கும் போலி நிறுவன மோசடி ஆசாமிகள். இது வரை கோயம்புத்தூரில் பாசி ஊழல் தொடங்கி ஈமு கோழி வரை பல கோடி ரூபாயை பொதுமக்கள் குறுக்கு வழியில் அதிக வட்டியுடன் பணம் சம்பாதிப்பதற்காக கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி பணத்தை போட்டு தொடர்ந்து கோவை மக்கள் ஏமாந்த வண்ணம் உள்ளனர். இதில் ஓய்வு பெற்று மகள் திருமணத்திற்கு வைத்திருந்த பணத்தை முதலீடு செய்தவர்கள், ஆடு மாடுகளை விற்று பணத்தை முதலீடு செய்தவர்கள், குழந்தைகள் கல்விக்காக சேர்த்து வைத்த பணத்தை முதலீடு செய்தவர்கள் என இப்படியாகத் தொடர்கிறது. இதேபோல் ஏமாந்த மோசடி சம்பவம் தற்சமயம் பீளமேடு பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி பல்வேறு மக்களிடம் 50 லட்சம் வரை மோசடி செய்த உரிமையாளரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை:நிதி நிறுவனம் நடத்தி இரட்டிப்பு பணம் தருவதாக கூறி, 50 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, பீளமேடு சிவகாமி ‘லே – அவுட்’ பகுதியை சேர்ந்தவர் ரிதுவர்ணன், 37. இவர் கடந்த மார்ச் முதல், நிதி நிறுவனம் நடத்தி வந்தார். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், தினமும் வட்டி பணம் அல்லது இரட்டிப்பு பணம் தருவதாக அறிவித்தார். இதை நம்பி பலரும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பிற முதலீட்டாளர்களை அழைத்து வந்தால், அதற்குரிய கமிஷன் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.கோவை ஆவாரம்பாளையம் துரைசாமி லே – அவுட்டை சேர்ந்த கேசவன், 23, என்பவர், 1.25 லட்சம் ரூபாயை கடந்த ஜூலை மாதம் முதலீடு செய்தார். ஆனால், முதலீட்டுக்கான வட்டிப்பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. இது குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவில், கேசவன் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், பலரிடம், 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர்களான ரிதுவர்ணன், ஸ்ரீஹரி, பாலமுருகன் ஆகிய மூவர் மீதும், போலீசார் வழக்கு பதிந்தனர். ரிதுவர்ணனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.