

தேனி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு உள்ள மலைமேல் வைத்தியநாதர் கோவில் அமைந்துள்ளது.பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் சிவன் ஆலயம் ஆகும். இத்திருக்கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை பாண்டிய மன்னர்கள், திருமலை நாயக்கர் மற்றும் பெரியகுளம் ஜமீன்தார்கள் பூஜை செய்து பராமரித்து வந்தனர். இத்திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோவிலுக்கு பல கோடி சொத்துக்கள் உள்ளது. இருந்தும் கோவில்கள் சரிவர பாதுகாக்கப்படவில்லை. பூஜைகள் செய்யவில்லை . இந்து சமய ஆலய ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே இக்கோவிலில் அரசு புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது .
இதுகுறித்து தேனி மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உண்மையா ராஜன் கூறியதாவது, இத்திருக்கோயிலை பராமரிக்க தவறிய இந்து சமய அறநிலைத்துறை வெளியேறவேண்டும். இத்திருக்கோயிலை இந்து சமுதாயத்திடம் பெரியகுளம் பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும் ,என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று கூறினர்.

