

சென்னை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ” டிரம்ப் ” என்ற அமைப்பு, திறமையானவர்களை அடையாளம் கண்டு மேன் மேலும் ஊக்கப்படுத்தும் முயற்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
அதன் முயற்சியாக குமரி மாவட்டம் தலைநகர் நாகர்கோவிலை அடுத்துள்ள வட்டவிளை அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவி கனிஷ்கா மூன்று நிமிடம், ஏழு நொடிகளில் 300 திருக்குறளை ஒப்புவித்து முந்தைய சாதனையை வென்று, புதிய சாதனை படைத்துள்ளார்.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ‘டிரம்ப்’ அமைப்பினர் முன்னிலையில் மாணவி கனிஷ்கா, 3 நிமிடம் 4 விநாடிக்குள் 300 திருக்குறளை ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக மாணவி கனிஷ்காவே 4 நிமிடம் ஒரு விநாடிக்குள் திருக்குறளை ஒப்புவித்து சாதனை படைத்திருந்தார். தனது சாதனையை தானே முறியடித்த மாணவி கனிஷ்காவிற்கு டிரம்ப் அமைப்பினர் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசும் வழங்கி கெளரவித்தனர். மாணவி பயிலும் வட்டவிளை அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கு கல்வி அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

