
தூத்துக்குடியில் திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் விரக்தியில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி ஸ்பிக் நகரைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ரமேஷ் (30). மடத்தூர் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஏற்பாடுகள் நடந்துள்ளது. ஆனால் அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லையாம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று மடத்தூரில் தான் வேலைபார்க்கும் நிறுவனம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
