ஆவணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. இதில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கலந்துகொண்டு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக நான்காவது ஆம்புலன்ஸ்அற்பணிப்பு நிகழ்ச்சி விழா தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆவணம் பகுதியில் நடைபெற்றது.இதில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில செயலாளர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் கலந்துகொண்டு.இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தனர்.ஆவணம் பகுதியில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டதற்க்கு.அப்பகுதி மக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.