தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஒரு சில சங்கங்கள் விதிமுறைகளை மீறி அதிகமாக விற்பனையாகும் கடைகளை பெற்றுத்தருவதாக பணியாளர்களிடம் விஷம பிரச்சாரம் செய்து ஆள் பிடிக்கும் வேலை செய்கிறது இந்த செயல் கண்டிக்கத்தக்கது என மாநில பொதுச் செயலாளர் ராஜா மதுரையில் பேட்டி
மதுரை தல்லாகுளம் பகுதியில் அரசு பணியாளர் சங்க கட்டிடத்தில் மதுரை மாவட்ட தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் சரவணகுமார் தலைமையிலும் மணவாளன் பாஸ்கரன் செல்வகுமார் முன்னிலை வகித்தனர் இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் ராஜா தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் ஜெயகணேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் மாநில
பொதுச்செயலாளர் ராஜா கூறியது ஒரு சில சங்கங்கள் விதிமுறைகளை மீறி அதிகமாக விற்பனையாகும் கடைகளை பெற்றுத்தருவதாக பணியாளர்களிடம் விஷம பிரச்சாரம் செய்து ஆள் பிடிக்கும் வேலை செய்கிறது இந்த செயல் கண்டிக்கத்தக்கது டாஸ்மாக் நிர்வாகம் இச்சயலுக்கு துணை போக கூடாது
தவறும் பட்சத்தில் இது குறித்து ஆதாரங்களுடன் மேலாண்மை இயக்குநர் கொண்டு செல்ல இச்சங்கம் நடவடிக்கையில் ஈடுபடும் எனவும் மற்றும் டாஸ்மாக் துறையில் கடந்த 18 ஆண்டுகளாக தொகுப்பூதியம் தற்காலிகம் என்ற பெயரில் குறைவான ஊதியத்தில் பணி புரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் மற்றும் 18 ஆண்டுகளாக சுமார் 4000 பணியாளர்களுக்கு மேல் மரணித்துள்ளனர் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வாரிசு வேலை வழங்க வேண்டும் காசு மதுரையில் அரசு கொள்கை முடிவு காரணத்தினால் 1500 கடைகள் மூடப்பட்டுள்ளன இந்தக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு அவர்களை தகுதி அடிப்படையில் பணி மூப்பு மற்றும் பணி விருப்பத்தின் அடிப்படையில் அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் மாற்றுப்பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் டாஸ்மாக் பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அரசு அறிவிக்க வேண்டும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய பாதுகாப்பு வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் மேலும் கருணாநிதி திட்டினாள் பாதிக்கப்பட்டு இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு தொகையாக அரசு வழங்க வேண்டும் இது உட்பட 5 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..