• Fri. Apr 26th, 2024

தனி மனித அந்தரங்களை வேவு பார்க்கும் பெகாசஸ்……..

Byadmin

Jul 25, 2021

இஸ்ரேலில் என்.எஸ்.ஓ எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் ஒரு மென்பொருள் பல நாடுகளில் கடுமையாக எதிர்க்கப்பட்ட நிலையில் அதனை இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதாகவும் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களை வேவு பார்த்தாகவும் நாடாளுமன்றமே கொந்தளிப்பில் உள்ளது. வங்கதேசம் மெக்சிகோ சௌதி அரேபியா போன்ற நாடுகள் இந்த மென்பொருளை பயன்படுத்தி வேவு பார்த்த நிலையில் தற்போது இந்தியாவில் வேவு பார்த்த விவகாரம் நாடாளுமன்றத்தில்
எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்பியுள்ளன. நாட்டின் பாதுகாப்பிற்காக உளவு பார்க்கப்படுவதாகக் கூறி இந்தியாவில் உள்ள எதிர்கட்சித் தலைவர்களையும் பத்திரிக்கையாளர்களையும் வேவு பார்ப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த மென்பொருளை பயன்படுத்தி ஒருவருடைய அந்தரங்கங்களை கண்காணிக்க முடியும். இந்த மென்பொருள் தயாரித்த என்.எஸ்ஓ. நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் செல்போன்கள் மீது சைபர் கிரைம் தாக்குதலை செய்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. வாட்சாப் நிறுவனமும் இந்த குற்றச்சாட்டை தற்போது சொல்லி வருகிறது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால் கசோக்ஜி 2017ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. அல்ஜெசிரா

பத்திரிக்கையாளர்களையும் இந்த மென்பொருள் மூலம் வேவுபார்க்கப்பட்டதாக் கூறப்படுகிறது. ஆனால் என்.எஸ்.ஓ நிறுவனம் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ள நிலையில் இந்தியாவில் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வயர் ஆங்கில பத்திரிக்கை ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கூறும் போது இந்தியாவில் 300 பேர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்டதாக கூறியுள்ளார். செல்போனில் உள்ள கேமரா வாட்சாப் கால் சிக்னல்கால் செல்போன் என அனைத்தும் வேவு பார்க்கப்படுவதாக 16 சர்வதேச ஊடகங்கள் குற்றம் சுமத்தி உள்ளன என்றார். நாம் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தால் அந்த கூட்டத்தில் இந்த மென்பொருள் உள்ள ஒரு போன் மூலம் அனைத்து தகவல்களையும் சேகரிக்க முடியும். அந்த அளவிற்கு மிக ஆபத்தான மென்பொருள் இது என்றார். இந்நிலையில் பேகாசஸ் உளவு செய்தி வெளியாவது தற்செயலானது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஒட்டுக்கேட்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் கூறியுள்ளார்.
இது குறித்து பீட்டர் அல்போன்ஸ் கூறும் போது இந்த பெகாசஸ் மென்பொருளை நாங்கள் பயன்படுத்தவில்லை என்று இந்தியா மட்டும் மறுக்கவில்லை. உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் மறுத்து உள்ளன. எதிரி நாடுகள் உளவு பார்த்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். அப்படி செய்திருந்தால் பிரதமர் ராணுவ அதிகாரிகளை உள்துறை அமைச்சரை அல்லவா உளவு பார்த்திருக்க வேண்டும். ஆனால் எதிர்கட்சியினர் பத்திரிக்கையாளர்கள் நீதிபதிகளை தான் உளவு பார்த்திருக்கிறார்கள். அமித்சா மகனை விசாரிப்பவர்களை பியூஸ்கோயலை விசாரிப்பவர்களை ரபேல் விமானம் குறித்து விசாரிப்பவர்களை எதற்காக நமது எதிரி நாடு விசாரிக்க வேண்டும்? 5 போன்களை மாற்றிய பிறகும் எனது போன்கள் உளவு பார்க்கப்பட்டது என்று பிரசாந்த் கிஸோர் தெரிவித்திருக்கிறார். பாஜகவால் ஆண்டி இண்டியன் என்று முத்திரை குத்தப்பட்டவர்களை உளவு பார்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே இதில் முக்கியமான விசயம். இன்றைக்கு விடை காண முடியாமல் நாடாளுமன்றம் முடங்கியிருக்கிறது. ஒருவரின் செல்போனை ஒட்டுக் கேட்பது அந்தரங்கங்களை வேவு பார்ப்பது எவ்வளவு பெரிய சைபர் கிரைம். தனி மனித உரிமை மீறல் என்பதை எல்லாம் மூடி மறைத்துநமது ஒன்றிய அரசு அமைச்சர்கள் பேசி வருவது வேடிக்கையானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *