இராமையன் பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தனியார் செல்போன் கோபுரத்தை அப்புறப்படுத்த வேண்டும்- மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் கோரிக்கை.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் நிறுவனர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நெல்லை இராமையன்பட்டி சைமன் நகர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் மனு கொடுக்க திரண்டு வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது- நெல்லை மாவட்டம் இராமையன்பட்டி சைமன் நகர் பகுதியில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 600 பிளாட்டுகள் உள்ளன. ஆயிரத்திற்கு அதிகமாக வீடுகளில் மக்கள் வசிக்கிறார்கள். இந்த பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை மற்றும் அரசு புறப்போக்கு நிலத்தை ஆகிரமித்து தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை தடுத்து நிறுத்தி வேறு இடத்தில் செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.