தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ஓடைமறிச்சான் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். வட்டாட்சியர் பட்டமுத்துவிடம் மனுகொடுத்தனர். அந்த மனுவில் ஓடைமறிச்சான் காமராஜர் நகர் பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருவதாகவும், சீவலப்பேரி சுடலை கோவிலுக்கு வடபுறம் உள்ள பொது நடைபாதையை 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், இந்த வழிப்பாதை வழியாக கிணற்றில் தண்ணீர் எடுத்து வருகின்றோம். இங்கு குடிநீருக்காக வைக்கப்பட்டிருந்த அடிபம்பு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. மேற்படி பொதுபாதையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாகவும். இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும். 50 குடும்ப மக்கள் பயன்பெறும் வகையில் 40 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை மீட்டு குடிநீர் வசதிக்காக மீண்டும் அடிபம்பு அமைத்து தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் விசாரணை நடத்துவததாக கூறியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.