• Wed. Dec 11th, 2024

தடைசெய்யப்பட்ட 1,100 கிலோ குட்கா பறிமுதல்..

Byadmin

Jul 19, 2021

கோவை மாவட்டம் சோமனூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 1,100 கிலோ குட்கா பறிமுதல், இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் சோமனூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை வஸ்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் போலீசார் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஒரு குடோனில் சோதனை மேற்கொண்ட போது அங்கு மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோதிலால் சீதாராம் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது வட மாநிலத்திலிருந்து 1,100 கிலோ குட்கா கடத்தி வந்ததும் சோமனூர் கருமத்தம்பட்டி, அன்னூர் பகுதிகளில் இதனை விற்பனை செய்ய வைத்திருந்ததும் தெரியவந்தது இதுகுறித்து அவர்கள் இருவரிடமும் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது கைது செய்யப்பட்டுள்ள மோதிலால் ஏற்கனவே குட்கா பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.