• Fri. Mar 29th, 2024

கோவை மாவட்டத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது…

Byadmin

Jul 19, 2021

கோவை மாவட்டத்தில் 8 வனச்சரகங்கள் உள்ளடக்கி கோவை மண்டல வனப்பகுதி அமைந்துள்ளது.இதில் போலுவம்பட்டி,மதுக்கரை, காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம்ஆகிய வனச்சரகங்கள் கேரள வனப்பகுதியை ஒட்டியும் சிறுமுகை,
மேட்டுப்பாளையம், வனச்சரகங்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியும் உள்ளது.இந்த வனச்சரகங்களில் யானை, புலி,சிறுத்தை,கரடி,மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
வனவிலங்குகளை பாதுகாக்க வேட்டை தடுப்பு காவலர்களும்,வனப் பணியாளர்களும் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வன குற்றங்கள் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அண்மையில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக மேட்டுப்பாளையம் சிறுமுகை வனச்சரகங்கள் யானை,புலி,சிறுத்தை, காட்டெருமை,செந்நாய், அரிய வகையான கழுதைப்புலி ஆகியவற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது வனத்துறையினர் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. வனப்பகுதிக்குள் நல்ல சீதோசன நிலை நிலவுவதால் வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *