• Sat. Apr 20th, 2024

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் – தஞ்சை உழைப்பாளர் சிலை முன்பு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Byadmin

Aug 4, 2021

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் தஞ்சை உழைப்பாளர் சிலை முன்பு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் 250க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காததால், பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடமும் ஒப்பந்தகாரரிடமும் கோரிக்கை வைத்தும் இது வரை ஊதியம் வழங்காததால், தனது அன்றாட தேவைகளுக்கு பணமின்றி சிரமப்பட்டு வருவதாகவும், இந்த மாதத்துடன் சேர்த்தால் மூன்று மாதம் ஊதியம் இல்லாமல் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டும் அவர்கள், தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள உழைப்பாளர் சிலை முன்பு அமர்ந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தையடுத்து, கலைந்து சென்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *