• Fri. Apr 18th, 2025

டெல்லியில் போராடும், விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டனர்…

Byadmin

Aug 3, 2021

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எட்டு மாதங்களை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று டெல்லி நோக்கி சோழன் விரைவு இரயிலில் புறப்பட்டனர். அதற்கு முன்னதாக தஞ்சை ரயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் எனவும், எனவே உடனடியாக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.