ஜெயங்கொண்டம் அருகே செங்குந்த புரத்தில் பூட்டியிருந்த வீட்டில் ஓட்டை பிரித்து அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் 4 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சக்தி செல்வராஜ், அதே பகுதியில் 6 வது குறுக்கு தெருவில் வசிக்கும் தனசேகர் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஜூலை 18ம் தேதி நேற்று இரவு இருவரின் வீட்டில் ஆட்கள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் பூட்டி இருந்த 2 வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பீரோவை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகைகள், ஏடிஎம் கார்டு வீட்டு பத்திரங்கள் என ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் இதுபற்றி ஜூலை 19ஆம் தேதி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.