ஒன்றிய அரசின் சொல்லுக்கும் செயலுக்கும் நிறைய மாற்றம் இருக்கிறது. பெட்ரோல்,டீசல் விலையில் அதிக வரியை அவர்கள் வசூலிக்கிறார்கள்.அதை குறைக்க வலியுறுத்தி வருகிறோம்.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை ஒன்றொன்றாக முதலமைச்சர் நிறைவேற்றுவார்.
வணிகர்களுக்கு ஜி.எஸ்.டியால் ஏற்படும் பாதிப்புகள்,ஜி.எஸ்.டியால் ஏற்படும் குளறுபடிகள் ஆகியவை குறித்து ஒன்றிய அரசிடம் கூறுவோம் – திருச்சியில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி.
அமைச்சர்கள் பங்கேற்கும் 8 மாவட்ட வணிகர்களுடன் கலாந்தாய்வுக் கூட்டம் திருச்சி கருமண்டபம் தேசிய கல்லூரி கலை அரங்கத்தில் 8 மாவட்ட வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெறும் கூட்டத்தில்,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ சங்கர், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை & இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், சட்ட அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட 5 அமைச்சர்கள் 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
இதில் திருச்சி, அரியலூர் , பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த வணிகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள், ஆலோசனைகளை நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி….
அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் வகையில் தவறாக தொழில் செய்பவர்களை கண்டறிந்து அதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.அதே போல ஜி.எஸ்.டி யில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைந்து வணிகர்கள் முறையாக வரி செலுத்தவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
பத்திரப்பதிவு துறையில் அங்கீகரிப்படாத வீட்டு மனைகளை பதிவு செய்ய கூடாது இடைத்தரகர்கள் இல்லாமல் பதிவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு வணிக வரி துறை மற்றும் பதிவுத்துறையில் நிச்சயம் வரி வருவாய் அதிகரிக்கும்.
கடந்த பத்தாண்டு காலம் வணிகர் நல வாரியம் அமையாமல் இருந்தது. தற்போது விரைவில் வணிகர் நல வாரியம் அமைக்கப்படும்.
தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் அறிவித்ததை படிப்படியாக செய்து வருகிறார்.
ஒன்றிய அரசின் சொல்லுக்கும் செயலுக்கும் நிறைய மாற்றம் இருக்கிறது. பெட்ரோல்,டீசல் விலையில் அதிக வரியை அவர்கள் வசூலிக்கிறார்கள்.அதை குறைக்க வலியுறுத்தி வருகிறோம்.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை ஒன்றொன்றாக முதலமைச்சர் நிறைவேற்றுவார்.
பத்திரப்பதிவு செய்ய டோக்கன் முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம்.இன்னும் ஒரு மாத காலத்தில் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் நீண்ட நேரம் மக்கள் காத்திருக்கும் நிலை இருக்காது.
வணிகர் நலனுக்கு எதுவெல்லாம் நடைமுறை சாத்தியமாக இருக்குமோ அதை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
கடந்த காலத்தில் ஆள் மாறாட்டம் செய்து போலியாக பத்திரங்கள் பதிவு செய்தது உண்மை ஆனால் தற்போது அது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வணிகர் நல வாரியத்தில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராக இருக்கலாம் என தெரிவித்தார்