


வால்பாறையை அடுத்த சோலையார் அணையானது. ஆசியா கண்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய அணையாகும் இது கோவை மாவட்டத்தில் உள்ளது இன்று காலை 8 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால். ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து தினந்தோறும் சோலையார் அணையின் 5 அடி நீர்ப்பிடிப்பு உயர்ந்தது.நேற்று காலை நிலவரப்படி 159 அடியை எட்டியதால.
இன்று இரவு கொட்டி தீர்த்த கன மழையால் 165 அடியான முழு கொள்ளளவு பூர்த்தியானது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கை அறிவித்த பின்னர் அணையின் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.


