
மறைந்த அதிமுக தலைவர் மதுசூதனனுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கட்சியின் இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் விசுவாசமிக்க தொண்டர்.
இந்த பேரியக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இயக்கம் துவங்கிய நாள் முதல் தன் விழிகளின் இமைகள் மூடும்வரை ஓயாது உழைத்த கழக உடன்பிறப்பு. புரட்சித்தலைவி அம்மாவின் நம்பிக்கைக்குரிய போர்ப்படைத்தளபதி. கட்சியின் வேர்களில் ஒருவர் என்று பலவாறாக அண்ணன் மதுசூதனனை வரலாறு சொல்லும். கழகத்தின் சோதனைக்காலத்தில் கழகத்தை கட்டிக்காத்த பொற்றுதலுக்குரிய தூண் சரிந்ததே என்று கண்ணீர் கடலில் மூழ்கியிருக்கும் நமக்கெல்லாம் யார் ஆறுதல் சொல்ல முடியும். அவரது இழப்பு கழகத்திற்கும் புரட்சித்தலைவரின் ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தங்களது இரங்கல் அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
