• Tue. Jun 24th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

செல்போன் டவர் இல்லாத ஏற்காடு.., உயிரைப் பணயம் வைக்கும் பள்ளி மாணவ, மாணவிகள்… நடவடிக்கை எடுக்குமா மத்திய, மாநில அரசுகள்..!

By

Aug 11, 2021

சேலம் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகும். இங்கு 70 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். குறைந்தது 40 ஆயிரம் மக்கள் ஓட்டு போடுபவர்களாக இருக்கிறார்கள். ஏற்காட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், ஒரு ஒன்றிய தலைவர் 9 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளனர். நாகலூர் கரடியூர் கொள ஊர், புளுவி, மரப்பாலம் பக்கோடா பாயிண்ட், செங்காடு தலைச்சோலை, சேர்வராயன் கோவில் வெள்ளை, கடை மஞ்சகுட்டை காவேரி பீச், குப்பனூர், குண்டூர் என பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியதுதான் இந்த ஏற்காடு தொகுதி. நான்கு வழித்தடங்கள் உள்ளன. அதில் நேர்வழி சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி வழியாக மலைமீது ஏறி வர வேண்டும்.

ஏற்காடு பின்புறம் இரண்டாவது வழி அயோத்தியாபட்டினம் வழியாக குப்பனூர் அந்த ஊர் ஆரம்பித்து மலைமீது ஏறி வரும் மூன்றாவது சேலம் பெங்களுர் நெடுஞ்சாலையில் தீவட்டிப்பட்டி பொம்மிடி ஆகிய வழிகளில் வரலாம் நடைபாதை வழியாக குண்டூர் வழியாக 60அடி பாலம் வரை நடந்து வரலாம். ஆக இந்த மூன்று வழிப்பாதையில் மட்டும் பேருந்து வசதிகள் உள்ளது.


பல மாநிலத்தவர்கள் இங்கு இடம் வாங்கிப் போட்டு பில்டிங் கட்டி சுற்றுலா காண வருபவர்களுக்கு வாடகைக்கு விட்டு வருகின்றனர். ஆனால் இங்கு எந்த செல்போன் டவரும் எடுப்பதில்லை. இங்கு மத்திய அரசின் பிஎஸ்என்எல் டெலிபோன் டவர் மற்றும் தனியார் ரிலைன்ஸ் ஜியோ டவர் ஆகியவை மட்டும் ஆங்காங்கே எடுக்கிறது. மற்ற தனியார் செல்போன் டவர் கம்பெனிகளில் எந்த ஒரு சிக்னலும் கிடைப்பதில்லை.

இதனால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், அங்கு வசிக்கும் மக்களும், மேலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் படிக்க வழியில்லாமல் போன் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். 4ஜி ,5ஜி வரும் இந்த காலகட்டத்தில் எந்த போன் வசதியும் இல்லாமல் இருக்கிறது. தற்போது இந்த கொரானா காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆன்லைன் கிளாஸில் படிக்கிறார்கள். அதற்கும் செல்போன் டவர் எடுக்காமல் இருக்கு படிக்க வாய்ப்பு இல்லாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். உயிரை பணயம் வைத்து மரங்கள், பாறை உச்சிகளில் அமர்ந்து படிக்கும் நிலை உருவாகி உள்ளது.


இதை தற்போது உள்ள மாநில அரசு, மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி இதற்கு ஒரு தீர்வு காணப்படுமா என ஏற்காடு மக்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்