பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் தற்போது சைக்கிள் விற்பனை சூடு பிடித்திருக்கிறது.
கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோலின் விலை 103ரூபாய் ஆகவும் டீசல் விலை 102 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளதால் அதற்கு மாற்றாக தற்போது சைக்கிளை தேர்வு செய்வதில் மக்கள் மும்பரம் காட்டுகின்றனர். இதுகுறித்து சைக்கிள் கடை உரிமையாளர் ராமிடம் நாம் பேசினோம். ‘தமிழகத்தின் சைக்கிள் விற்பனையானது பெட்ரோல் விலை அதிகரித்தது முதல் கொஞ்சம் அதிகமாகி வருகிறது. இதற்கு காரணம் பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்ல மக்களிடம் இருக்கும் உடல்நிலை குறித்த விழிப்புணர்வும் தான். இதனால் சைக்கிள்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் அவர்களுக்குத் தேவையான அளவிலும் அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ப வாங்கி செல்கின்றனர். ஒரு சாதாரண சைக்கிள் 4000 முதல் விற்பனை செய்யப்படுகிறது. கியர் சைக்கிள் 15 ஆயிரம் முதல் 4 லட்சம் வரை இருக்கிறது. இந்த சைக்கிள் மூலம் தினசரி நாம் போகும்போது உடல் நிலம் சம்பந்தமான வியாதிகளும் வராமல் சுற்றுச் சூழலுக்கு மிகவும் இது பாதிப்பாக இருக்கிறது எனவேதான் மக்கள் இதை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் செல்கிறார்கள் அதுபோக சைக்கிளுக்கு தற்போது 18% ஜிஎஸ்டி ஆனது மத்திய அரசு விதித்திருக்கிறது. இதை 5 சதவீதமாக குறைத்தால் மக்களிடம் சைக்கிள் ஓட்டும் ஆர்வம் இன்னும் அதிகமாகும்’ என்கிறார் சைக்கிள் கடை உரிமையாளர் ராம்.