• Fri. Apr 18th, 2025

சுற்றுலா பயணிகளை எதிர்பார்க்கும் உள்ளூர் மக்கள்!…

By

Aug 15, 2021

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை குறையத் தொடங்கியுள்ளதால் தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என உள்ளூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு பயணிகள் வரலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஜூன் மாத முதல் வார இறுதியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் சமூக இடைவெளி முற்றிலும் இல்லாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு கடும் சவாலாக இருந்தது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் கொரோனா விதிமுறைகளை கடுமையாக்கி, காவல்துறை, சுற்றுலாத்துறை, நகராட்சி உள்ளிட்ட துறையினரை முடுக்கிவிட்டது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பயணிகளுக்கு அபராதம் விதித்தும், எச்சரிக்கை செய்தும், வெள்ளி நீர் வீழ்ச்சி சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனை கட்டாயம் எனவும் அறிவித்தது.

இந்நிலையில் இந்த வார இறுதியில் மலைப்பகுதிகளுக்கு குறைந்த அளவிலான பயணிகளே வருகை புரிந்துள்ளனர். மேலும் விரைவில் பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பு உள்ள நிலையில் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை கணிசமாக குறையும் எனவும், அதனால் கொஞ்சம் கொஞ்சமாக 12 மைல் சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்களை கொஞ்சம் கொஞ்சமாக திறக்க வேண்டும் என அரசுக்கு உள்ளூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.