சிவகங்கை அருகே கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை அருகே கோமாளிபட்டியல் கொரோனா நேரத்தில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மஞ்சு விரட்டு போட்டியை காண சிவகங்கை, ஒக்கூர், இடையமேலூர், சக்கந்தி, புதுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் வந்து குவிந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகங்கை நகர் போலீசார் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மஞ்சு விரட்டு நடத்தியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மஞ்சு விரட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் 20க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. வருகின்றனர்.