

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 36 தலைவர்களுள் என்.சங்கரய்யாவும் ஒருவர். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான சங்கரையா அவருக்கு வயது 100 தமிழகத்தில் இடதுசாரி சிந்தனைகள் வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றியவர் இவரது பிறந்த தினத்தை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தினார்.
இந்நிலையில் சங்கரய்யாவை கௌரவிக்க விரும்பிய முதல்வர் ஸ்டாலின் அவருக்காக ஒரு விருதை உருவக்கினார். அந்த விருதுக்கு பெயர் தகைசால் தமிழர் என்பதாகும். தேசத்திற்காகவும் உழைக்கும் மக்களுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சங்கரய்யாவுக்காக தகைசால் விருதை வழங்கி விருதுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் ஸ்டாலின். பொதுவாக புகழ்ச்சிக்கு மயங்குகிற மனிதரல்ல சங்கரய்யா. ஆனாலும் இந்த விருதை நான் ஏற்கிறேன என்று அறிவித்தவர் அதில் கிடைத்த ரூ.10 லட்சத்தை கொரானா பாதுகாப்பு நிதிக்காக மீண்டும் தமிழக அரசுக்கே வழங்கினார் என்றால் பாருங்களேன். விருதால் பலர் பெருமையடைகிறார்கள். ஆனால் இங்கே விருது பெருமையடைந்திருக்கிறது.

