• Thu. Apr 25th, 2024

கோவில்பட்டியில் கரோனா தடுப்பூசி திருவிழா

Byadmin

Jul 17, 2021

கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம், நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் தடுப்பூசி திருவிழாவில் 250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

கரோனா பரவுதலை தடுக்கும் விதமாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது.கோவில்பட்டி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற தடுப்பூசி திருவிழாவில் பொதுமக்கள் 250 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

முகாமிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் விக்னேஸ்வரன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் தயாள் சங்கர் அனைவரையும் வரவேற்றார். தடுப்பூசி திருவிழாவை ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயக ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சீனிவாசன், டாக்டர் சம்பத்குமார், தன்ராஜ் ராஜா, நாராயணசாமி, வீராச்சாமி,ரத்தன் டாகா, முத்துச்செல்வன், வி.எஸ்.பாபு, பரமேஸ்வரன், லட்சுமணப் பெருமாள், பத்மநாபன்,ரவி மாணிக்கம், சௌந்தர்ராஜன், காளியப்பன், மாரியப்பன், யோகா குணா, பிரபாகரன்,டாக்டர் விஜய் முத்து முருகன் உள்பட மருத்துவ அலுவலர்கள்,செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் நாராயணசாமி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *