• Fri. Apr 18th, 2025

கொந்தகை அகழாய்வில் இரும்பு வாள் கண்டுபிடிப்பு!…

Byadmin

Aug 7, 2021

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி கொந்தகை மணலூர் அகரம் ஆகிய இடங்களில் எல்லாம் கட்டடங்கள் ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 850-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொந்தகை அகழ்வாய்வில் மனித எலும்புக்கூடுகள், முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருகிறது. ஒரு குழியிலிருந்து தான் இரும்புவாள் கிடைத்துள்ளது. இந்த வாள் 40 சென்டிமீட்டர் நீளமும், மரக்கைப்பிடி 16 செண்டிமீட்டரும் உள்ளது. மேலும் இந்த குழியில் மனித எலும்புகள், சுடுமண பாத்திரங்களும், கிடைத்துள்ளன. வாள் குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவிற்கு அனுப்பவுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.