• Fri. Mar 29th, 2024

குமரி கடற்கரையில் கலைநிகழ்ச்சிகள், ஆசனங்கள் மற்றும் கோலங்களின் வாயிலாக கொரோனா விழிப்புணர்வு..!

By

Aug 7, 2021

கொரோனா விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு கலை நிகழ்ச்சிகள், கிராமிய நடனம், ஆசனங்கள் மூலமும், கன்னியாகுமரி கடற்கரையில் கோலம் இட்டும் கொரோனோ விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளபட்டது.
கன்னியாகுமரி கடற்கரையில் பெண்கள் கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்கள் பெண்கள் கோலமிட்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இந்த கோலங்கள் கொரானா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியதாக இருந்தது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு சென்றனர்.
இதே பகுதியில் பள்ளி மாணவிகள் ஆசனம் நடத்தி கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இரணியல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் நிவிஷா(15) மற்றும் மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ப்ரீத்தி(14) ஆகியோர் பல்வேறு ஆசனங்களை நடத்தி பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *