திராவிடர் தமிழர் கட்சி சார்பில் தமிழக அரசு அறிவித்த பஞ்சமி தரிசு நிலங்களை மீட்டு இலவச வீட்டுமனை பட்டா தர கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க 100க்கும் மேற்பட்டோர் குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியரிடம் திராவிடர் தமிழர் கட்சி சார்பில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து நேரடியாக மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி, கோட்டார்,பெருவிளை, செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 2012 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பல முறை மாவட்ட ஆட்சியரிடமும் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியரிடமும் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இது வரை மாவட்ட நிர்வாகம் எடுக்காதது தொடர்ந்து தமிழக அரசு அறிவித்துள்ள பஞ்சமி தரிசு நிலங்களை மீட்டுத் தர கேட்டு திராவிட தமிழர் கட்சி சார்பில் 100க்கு மேற்பட்டோர் திரண்டா வந்து ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்தனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.