கல்வி கண் திறந்த காமராஜர் என்று புகழப்படும், காமராஜர்யின் 119_ம்ஆண்டுவிழா தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் நினைவு மண்டபத்தில் சார்பில்.தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற விழாவில் உள்ள பெரும் தலைவர் சிலைக்கு.அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.
காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற டார்ச் ஓட்டத்தை ஒளி ஏற்றி அமைச்சர் மனோதங்கராஜ் தொடர் ஓட்டத்தை தொடங்கிவைத்தார்.
குமரி காமராஜர் நினைவு மண்டபத்தில் உள்ள பெரும் தலைவர் காமராஜர் சிலைக்கு . நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமுக அமைப்புகளின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.