• Mon. Jan 20th, 2025

ஒரு தரப்பினருக்கு மட்டுமே தடுப்பு ஊசி போட்டதால் நாமக்கல்லில் தள்ளுமுள்ளு!…

Byadmin

Aug 8, 2021

நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிபாளையம் அருகே கொரோனா தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஒரு தரப்பினருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில் , தமிழக அரசு கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அதிக அளவில் செலுத்தி வருகிறது.இதையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆர்எஸ் உயர்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

 200தடுப்பூசி மகப்பேறு பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு போடப்பட்டது.கொரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்களுக்கு முறையாக அறிவிப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் ,சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி முறைப்படுத்தினர்.அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஒருதலைப்பட்சமாக நடத்து கொள்வதாகவும் ,டோக்கன் முறையில் தடுப்பூசி செலுத்தாமல் வேண்டியவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கபடுவதாக வாக்குவாதம் செய்தனர்.இதனால் கொரோனா தடுப்பூசி முகாமினை முறைபடுத்தி நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.