• Fri. Jan 17th, 2025

ஐபிஎல் போட்டிகளில் இனி பரபரப்புக்கு பஞ்சம் இல்லை!…

By

Aug 15, 2021

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.


இந்தியாவில் இந்தாண்டு திட்டமிட்டதுபோல பார்வையாளர்களின்றி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டாலும் கொரோனா பாதிப்பு காரணமாக இடையில் போட்டி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து போட்டிகள் நடத்தப்படலாம் வேண்டாமா என்பது குறித்து நீண்ட ஆலோசனைக்கு பிறகு எஞ்சிய போட்டிகிள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. இதனையடுத்து செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை போட்டிகள் நடைபெற உள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் அனைத்து அணிகளிலும் ஆஸ்திரேலிய வீரர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். ஒவ்வொரு முறையும் ஐபிஎல்லில் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் வீரர்கள் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

இப்போது அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கும் அனுமதி பெற வேண்டும் என்ற சூழலில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் பங்கேற்க விரும்பும் வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனையடுத்து ஐபிஎல்லில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் முடிந்ததும் அமீரகம், ஓமனில் நடைபெற இருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற இருப்பதால் அதற்கு ஏற்ப ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.