தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ஐந்தாங்கட்டளையை சேர்ந்தவர் ராம். வயது 45. தோழிலாளி. இவரது மகன் பவுல். வயது 15. பவுல் ஜூலை 24ம் தேதி தந்தையிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். இரவு நீண்டநேரமாக வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை ராம் உறவினர்கள் உதவியுடன் விடிய விடிய பல்வேறு இடங்களில் தேடினார். இது குறித்து கடையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் மதியம் 12 மணியளவில் ஐந்தாங்கட்டளை அருகே தோட்டத்தில் பதுக்கியிருந்த மாயமான சிறுவன் பவுலை போலீசார் மீட்டனர் கடையம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். சிறுவன் பவுலுக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் ஐந்தாங்கட்டளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.