கடந்த இரண்டு ஆண்டுகளாக, மக்களை வதைத்து வரும் கொரோனா என்னும் பேரிடர் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலாத் தலங்கள் என மக்கள் கூடும் இடங்களுக்கு தடை செய்யப்பட்டது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஸ்தலமான, சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்க்கும், ஒன்றரை வருடங்களாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுனுக்குப் பிறகு தற்போது கடந்த சில நாட்களாக சுற்றுலா செல்ல பயணிகள் கட்டுப்பாடுகளுடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடுவதால், அதனால் ஏற்படும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏற்காடு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். அதையும் மீறி வரும் மக்களுக்கு அங்கேயே கொரோனா பரிசோதனை செய்து உள்ளுர் மக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படடு வருகிறது. ஏற்காடு பேருந்தில் கூட பயணிகளை சோதனை செய்து வருகின்றனர். வெளி மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்கள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து, அந்த வாகனங்களையெல்லாம் திருப்பியும் அனுப்பி வருகிறார்கள்;. மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா பரவலைத் தடுப்பதற்கான அறிவுரைகளையும், துண்டுப்பிரசுரங்களையும் வழங்கி வருவருடன், கூட்டம் கூடும் இடங்களில் ஒலிப்பெருக்கி மூலம் கலைந்து செல்லவும் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.