திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுவனம்பட்டி ஊராட்சியில் தலைவர் வசந்தாமணிவண்ணனுக்கு எதிராக துணைத்தலைவர் லதா உறுப்பினர்கள் முருகன் வீரலட்சுமி பெருமாள் சுதா பாண்டீஸ்வரி சுந்தர்ராஜ் தாமரைச்செல்வி சிவனேசன் ஆகியோர் வெள்ளியன்று திண்டுக்கல் ஆட்சியரிடம் புகார் கூறினர். ஊராட்சி நிர்வாகம் குடும்பத்தலைமையாக மாறிவிட்டது. தலைவர் வசந்தாவின் கணவர் மணிவண்ணன் மகன் பிரவீன் ஆகியோர் கூட ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடு செய்வதாக கூறப்படுகிறது. 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி நிதியை கையாடல் செய்திருப்பதாகவும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையே ஊராட்சி செயலர் ஜெயபால் பணியிடை மாற்றம் செய்திருப்பதும் சந்தேகத்தை கிளப்புவதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர். மன்றத்தலைவர் வசந்தா மற்றும் அவரது கணவன் மணிவண்ணன். மகன் பிரவீன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் துணைத்தலைவர் லதா உள்ளிட்ட 9 உறுப்பினர்களும் ராஜினாமா செய்யப் போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.