

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம்ஆர் கணேஷ் மற்றும் எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோர் ரூ.16 கோடி ஏமாற்றி விட்டதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்திருந்த நிலையில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கும்பகோணத்தில் துபாய் தொழிலதிபர் தம்பதிகளான ஜபருல்லா பைரோஸ் பானு ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர் கூறியதாவது. எங்களது மகன் மாற்றுத்திறனாளி. அவரது பேரில் கும்பகோணத்தில் இறை இல்லம் கட்டி சேவை செய்ய வேண்டும் என்பதற்காக ரூ. 16 கோடி பணம் வைத்து இருந்தோம். இந்த பணம் துபாயில் கஷ்டப்பட்டு சம்பாதித்தது. எங்களிடம் பணம் இருப்பது பற்றி தகவல் தெரிந்து கொண்ட ஹெலிகாப்டர் சகோதரர்கள் என கூறப்படும் எம்ஆர் கணேஷ் மற்றும் எம்ஆர் சுவாமிநாதன் நாங்கள் தங்கம் மற்றும் பல பிசினஸ் செய்வதாக கூறி எங்களிடம் முதலீடு செய்தால் பெனிபிட் கிடைக்கும் என தெரிவித்தனர். அதனை நம்பி நாங்கள் வைத்திருந்த பணம் ரூ.16 கோடியை கொடுத்தோம். ஆனால் நீண்ட நாட்களாகியும் பணத்தை அவர்களுக்கு திருப்பி கொடுக்கவில்லை. பணத்தை திருப்பித் தராததால் நாங்கள் சென்று கேட்டபோது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜா போட்டோக்களை காட்டி எங்களை மிரட்டினார்.மேலும் நாங்கள் சென்று பணத்தை கேட்கும்போது நீங்கள் என்னிடம் பணத்தை திருப்பி வாங்கி விட்டால் ஒட்டு துணி இல்லாமல் கும்பகோணத்தை சுற்றி வருகிறேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.நாங்கள் பணத்தை வங்கி மூலமாக கொடுத்ததால் அதற்கான அனைத்து ஆவணங்களும் முறையாக எங்களிடம் உள்ளது. அந்த அனைத்து ஆவணங்களையும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து புகார் அளித்தோம். ஆவணங்களை ஆய்வு செய்த அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் என்னைப்போல் கும்பகோணத்தில் ஏராளமானோரிடம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் ரூ 600 கோடி வரை ஏமாற்றி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளோம். அதேபோல் தலைமைச் செயலாளர் இறையன்புஇ தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆசிரியரிடமும் மனு அளித்துள்ளோம். மேலும் பிரதமர் மோடிக்கு மின்னஞ்சலில் புகார் அளித்துள்ளோம்.ஹெலிகாப்டர் சகோதரர்கள் கும்பகோணத்தில் சுருட்டிய படத்தை வெளிநாட்டில் பதிக்கி இருப்பதாக தெரிகிறது. எனவே தமிழக முதலமைச்சர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு எங்களது பணத்தையும் எங்களைப்போல் கும்பகோணத்தில் ஏமாற்றப்பட்டவர்கள் பணத்தையும் மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறினார்

