

அதிமுக ஆட்சியின் போது முன்னாள் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள் என 26 இடங்களில் சில தினங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் சோதனையிடப்பட்டது.
இந்த சோதனையில் ரூ.25.56.000 ரொக்கப்பணம் மற்றும் ஆவணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் கூறும் போது எனது வீடு நிறுவனங்களில் நடைபெற்ற சோதனை திமுகவின் பழிவாங்கும் நிகழ்ச்சியாகும். சோதனையில் பறிமுதல் செய்த பணத்திற்கும் ஆவணங்களுக்கும் என்னிடம் கணக்கு உள்ளது. இது போன்ற சோதனை மிரட்டல்கள் மூலம் எனது கட்சியின் செயல்;பாட்டை தடுக்கலாம் என நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது.இந்த சோதனை நான் எதிர்பார்த்த ஒன்று தான். 35 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன். சென்னை மற்றும் கரூரில் எனக்கு சொந்த வீடு கிடையாது. போக்குவரத்துறையில் அதிமுக நிர்வாகிகளை இடமாற்றம் செய்கிறார்கள். அனைத்து துறைகளிலும் இப்படி நடைபெறுகிறது. இது நல்லதுக்கல்ல என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியில் கூறியிருந்தார்.

