• Thu. Jan 23rd, 2025

எங்களுக்கும் 100 நாள் வேலை வேணும்… கொடி பிடிக்கும் மகிளா காங்கிரஸ்!..

By

Aug 17, 2021

ஊராட்சிகளில் காங்கிரஸ் அரசு காலத்தில் கொண்டுவரப்பட்ட நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை பேரூராட்சி பகுதிகளில் அமல்படுத்த கோரி குமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கிராமப் புறங்களில்100 நாள் வேலை வாய்ப்பு என்னும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலை இந்த வேலை வாய்ப்பினை பேரூராட்சி பகுதிகளில் உள்ள முதியோர் மற்றும் பெண்கள் விவசாய வேலை இல்லாத காலங்களில் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவதால், அவர்களும் பயனடையும் வகையில் பேரூராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே எழுந்து வருகிறது.

இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும் படி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சிரியரிடம் அம்மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி அருள் சபிதா தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.