உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ரெட்டியார்பட்டியில் ஆலங்குளம் தெற்கு வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளார்கள் செல்லத்துரைஇ அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஆலடி எழில்வாணன்இ துணை அமைப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ்இ மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சமுத்திரபாண்டியன். சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் ஷேக் முகமது உள்பட திமுக முக்கிய நிர்வாகிக்ள பலர் கலந்து கொண்டு வரும் உள்ளாட்சி தேர்தலில் ஆலங்குளம் ஒன்றியத்தில் திமுக வெற்றி பெறுவது தொடர்பான பணி ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக மாநில பேச்சாளர் வேங்கை சந்திரசேகர், கோட்டைசாமி, ஒன்றிய அவைத்தலைவர் தங்கப்பாண்டி, ஆலங்குளம் நகர செயலாளர் வக்கீல் நெல்சன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சரஸ்வதி பாஸ்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் தேமுதிக முன்னாள் மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் வள்ளித்துரை, ஒன்றிய தேமுதிக துணை செயலாளர் பண்டாரம் ஆகியோர் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ரெட்டியார்பட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்- மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்புரை…
